இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த ஜாம்பவான்! வெளியான புகைப்படம்


மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் விவியன் ரிச்சார்ட்ஸ், தற்போது போட்டி வர்ணனையாளராக உள்ளார்.

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், போட்டிக்கு முன்னதாக கள நிலவரங்கள் குறித்து வர்ணனை செய்து கொண்டிரும்போது தீடீரென மயங்கி விழுந்தார். பின்பு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.

அதன் பின்பு உடல் நிலை தேர்ச்சி பெற்று மீண்டும் போட்டியை குறித்த வர்ணனயை தொடர்ந்தார். அப்போது அவர், உலகத்தில் உள்ள எனது ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், தற்போது எனக்கு உடல் குணமடைந்துவிட்டது. நான் மீண்டும் வந்துவிட்டேன்.

எந்த பந்துவீச்சாளரும் செய்ய முடியாத காரியத்தை இயற்கை செய்துவிட்டது என நகைச்சுவையோடு கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்