அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் உலக நாடுகளுக்கு ஆபத்து... இம்ரான் கான்


காஷ்மீர் விவாகரத்தில் இருநாடுகளுக்கு இடையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் உலக நாடுகளுக்கு ஆபத்து என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5 ம் திகதி காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பாதுகாப்பு படையினர் மீது கல் வீசும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் வீசுகின்றனர்.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை அதன் சிறப்பு அந்தஸ்தில் இருந்து அகற்றுவதன் மூலம், புது தில்லி தனது சொந்த சட்டங்களை உருவாக்கும் பிராந்தியத்தின் உரிமையைத் தடுத்துள்ளது மற்றும் குடியிருப்பாளர்கள் அங்கு சொத்து வாங்க அனுமதித்தது.

இந்த மாற்றம் காஷ்மீரின் வளர்ச்சிக்கு, அனைவரின் நலனுக்கும் உதவும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் அதன் நடவடிக்கை இப்பகுதியில் வசிக்கும் பலரை கோபப்படுத்தியது மற்றும் பாகிஸ்தானால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

இந்தியாவின் நடவடிக்கைகளை கண்டித்து பாகிஸ்தான் பிரதமர் சர்வதேச அரங்கிற்கு எடுத்து செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள சீக்கிய மத சமூக மக்களிடையே உரையாற்றிய அவர், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் எந்தவொரு தவறான எண்ணமும் உலகிற்கு ஆபத்தை விளைவிக்கும். இதில் பாகிஸ்தான் எப்பொழுதும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது.

முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட காஷ்மீர், நீண்ட காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. இரு நாடுகளும் காஷ்மீரின் சில பகுதிகளை முழுமையாக ஆட்சி செய்கின்றன என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்