தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா: எப்படி தெரியுமா?கணினி உலகில் உலகளவில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர்களின் எண்ணிக்கையினை விடவும் இந்தியாவிலுள்ள டெவெலொப்பர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.2 மில்லியன் டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்கள் காணப்பட்டன.

ஆனால் இவ் வருடம் ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கையானது 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 2.246 மில்லியன் டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்களும், கடந்த ஜுலை மாத கணக்கெடுப்பின்படி சுவிட்ஸர்லாண்ட் மற்றும் நோர்வே உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் 2.093 டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்களும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இந்தியா அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர் வேலைவாய்ப்பில் முன்னணியில் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்