யூடியூப்பால் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை: பல மில்லியன் டொலர்கள் அபராதம்


பிரபல வீடியோ பகிரும் தளமான யூடியூப்பினை கூகுள் நிறுவனமே நிர்வகித்து வருகின்றமை தெரிந்ததே.

யூடியூப்பில் ஏற்பட்ட தவறினால் சுமார் 170 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கூகுள்.

சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக யூடியூப் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யூடியூப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு எதிராக அமைந்துள்ளது.

இதனால் மேற்கண்ட தொகைய அபராதமாக செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.

எனினும் இத் தொகையானது கூகுள் நிறுவனத்திற்கு மிகவும் சிறிய தொகை எனவும் இதை விடவும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தற்போது கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்