தொலைந்த கைப்பேசிகளை கண்டுபிடிக்க இந்திய அரசின் புதிய திட்டம்களவாடப்பட்ட அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கைப்பேசிகளை கண்டுபிடிப்பதற்கு இந்திய அரசு புதிய இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Department of Telecommunications (DoT) அமைப்பின் கீழ் இந்த சேவை பொதுமக்களுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொடர்பாடல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

மேலும் இத் திட்டத்திற்கு Central Equipment Identity Register (CEIR) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கைப்பேசிகளும் International Mobile Equipment Identity (IMEI) இலக்கத்தின் அடிப்படையில் தனித்துவமாகக் காணப்படுகின்றமையினால் இத் திட்டத்தினை செயல்படுத்துவது இலகுவானதாகும்.

இதன் அடிப்படையில் தமது திருடப்பட்ட அல்லது தொலைந்த கைப்பேசிகள் தொடர்பாக குறித்த இணையத்தில் புகார் அளிக்கும் தருணத்தில் பொதுமக்களுக்கு உதவ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தள முகவரி - http://www.ceir.gov.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்