வியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகின்றது வெளிநாட்டு விமானம்எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் Alliance Air நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு, சென்னையில் இருந்து பரீட்சார்த்த விமானப் பறப்பு மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், குறித்த விமானம் தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது சென்னையில் இருந்து வரும் Alliance Air நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இந்திய நகரங்களுக்கு மேற்கொள்வதற்கு பயணங்களை ஆரம்பிக்க முன்னதாக தயாரிக்கப்பட்ட திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை, திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை இயக்க அதிகாரிகள் தயாராகி வருவதால், இந்த திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள.

கருத்துரையிடுக

0 கருத்துகள்