டி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து.. முதலிடத்தை பிடித்தது இந்தியா


ராஜ்கோட்டில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் வெற்றிப்பெற்றதின் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை இந்திய அணி முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் 154 என்ற வெற்றி இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோகித்தின் அபார துடுப்பாட்டத்தால் 15 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.

டி-20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது இந்திய அணி பெற்ற 41வது வெற்றியாக இது அமைந்தது.

இதன் மூலம் 40 வெற்றிகள் பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து, சேஸிங்கின் போது அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் இந்திய முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சேஸிங்கின் போது அவுஸ்திரேலியாவை விட இந்தியா அதிக வெற்றி சதவிதத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டி-20 போட்டியில் 61 முறை வெற்றி இலக்கை சேஸ் செய்துள்ள இந்திய அணி 41 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா 69 போட்டியில் 40 முறை வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியாவை தொடர்ந்து 67 போட்டிகளில் 37 முறை சேஸ் செய்து வெற்றிப்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.