இந்த அணிகளுக்கு தான் டி20 உலக கிண்ணம்! பிரபல வீரரின் கணிப்பு


2020ம் ஆண்டுக்கான டி20 உலக கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவே வெல்லும் என இங்கிலாந்து அணியின் அணித்தலைவரான மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

அடுத்தாண்டு அவுஸ்திரேலியா டி20 உலக கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தற்போது போட்டிகள் குறித்த பேச்சு தொடங்கிவிட்ட நிலையில் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவே வெல்லும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை அவுஸ்திரேலியா சொந்த மண்ணில் துவம்பவம் செய்தது.

அத்துடன் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 3-2 எனத் தொடரை கைப்பற்றியது, இதனைவைத்தே வாகன் இவ்வாறு கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.