9 ஆண்டுகள் கழித்து பொதுநிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் அஜித்.. என்ன நிகழ்ச்சி தெரியுமா.?


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் என்ன தான் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், இவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்து வந்ததால் நடிகர் அஜித் மீது பல விமர்சனங்கள் எழுந்துகொண்டே தான் இருக்கிறது.

இருப்பினும், இவரது ரசிகர்கள் பட்டாளம் எப்பொழுதும் இவரை விட்டுகொடுத்ததில்லை. இவரது படம் வெளியாகிறது என்றால் அன்று தமிழகத்திற்கே திருவிழா தான். அந்த அளவிற்கு கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், இவர் இறுதியாக கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சி என்றால் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி தான்.


அதில், இவர் பேசிய விசயங்கள், இவரை தனி அடையாளமாக மாற்றியது.

அதன்பிறகு, இவர் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த வந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகள் பிறகு, உலக நாயகன் கமல்ஹாசனின் 60-வது ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்க இருக்கிறது.

இதில் கமல்ஹாசனை வாழ்த்த ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நடிகர் அஜித்தும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.