இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்! இலங்கைக்கும் எச்சரிக்கை!!


இந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.30 அளவில் கடலடியின் கீழ் 45.1 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆழிப்பேரலை எச்சரிக்கையை அடுத்து இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளும் எச்சரிக்கப்பட்டாலும் இந்தப் பிராந்தியத்துக்கு ஆபத்து இல்லையென கூறப்பட்டுள்ளது.