கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்! அமெரிக்காதிடகாத்திரமான இறைமையுள்ள இலங்கைக்காக கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்த கருத்தை தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியிடம் இருந்து நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைக்காப்பு, நல்லிணக்கம் மற்றும் திடகாத்திரமான இறைமைக்கொண்ட இலங்கை என்பவற்றை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக தேர்தலில் பங்கேற்ற இலங்கை மக்களுக்கு அவர் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.