இலங்கை தமிழர்கள் தொடர்பில் கோட்டாபயவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ள முக்கிய விவகாரம்!


இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அரசியல் தீர்வை உறுதிப்படுத்தவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய பிரதமரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், கோட்டாபய ராஜபக்சவை நேற்று முன்தினம் சந்தித்தபோது இதனை வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்; ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் உட்பட்ட ஏனைய மக்கள் அமைதி மற்றும் இறைமையுடன் வாழ வழிசெய்யப்படவேண்டும் என்று ஜெய்சங்கர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் இனங்களின் அடையாளங்களை கருத்திற்கொள்ளாது தாம் அனைவருக்கும் பணியாற்றவுள்ளதாக கோட்டாபய உறுதியளித்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.