இந்தியா - சீனா மீது ட்ரம்ப் காட்டம்!


அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்பகுதி மாசடைவதற்கு ஆசிய நாடுகளே காரணம் என

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளால் கடலில் கலக்கப்படும் குப்பைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாகவே இந் நிலை ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியற்றையே தான் விரும்புவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.