லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட சவப்பெட்டிகள்... கதறி அழுத குடும்பத்தினர்! பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்


வியட்நாமில் இருந்து குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க லாரியில் மறைந்து சென்ற 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களில்16 பேரின் சவப்பெட்டிகள் சொந்த ஊருக்கு வந்தடைந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் எசக்ஸ்லில் லாரி டிரக் ஒன்றில் 39 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.


உயிரிழந்தவர்கள் வியட்நாமை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.


இந்நிலையில் உயிரிழந்த 39 பேரில் Hoang Van Tiep என்ற 18 வயது நபரும், அவரின் உறவினர் Nguyen Van Hung என்ற 33 வயது நபரும் அடங்குவர்.

இவர்களின் உடல்கள் என மொத்தம் 16 பேரின் சவப்பெட்டிகள் கடந்த புதன் கிழமை வியட்நாமின் Hanoi நகருக்கு, லண்டனிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.


இதையடுத்து Hoang Van Tiep மற்றும் Nguyen Van Hung-ன் சவப்பெட்டிகள் Dien Chau மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் குவிந்திருந்தனர். அவர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆம்புலன்ஸ் வந்த பின்னர் சவப்பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டு, அவர்களுக்கான இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.


அப்போது அதில் வெள்ளை நிற ரோஜா பூக்கள் மற்றும் சில பூக்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்.

அங்கிருந்த உறவினர்கள், இரண்டு பேருமே நல்ல மனிதர்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தின் நிலைக்காக சம்பாதிக்க அங்கு சென்றனர், ஆனால் அவர்கள் இப்படி திரும்புவார்கள் என்று நினைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.