ஐபிஎல் தொடரில் நான்கு முக்கிய வீரர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்! யார் யார் தெரியுமா?


2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு சீனியர் வீரர்களை கழட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிகள் பங்கேற்றாலும் சென்னை அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது.

இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்களும், மாற்று வீரர்கள் என இறுதி பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

இதையடுத்து சென்னை அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து நான்கு சீனியர் வீரர்களை மாற்றதிட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதில் அம்பதி ராயுடு, முரளி விஜய், சார்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவருகிறது.

இதில் ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ ப்ளஸி ஆகியோரின் அசைக்க முடியாத துவக்கத்தால் முரளி விஜய், கடந்த ஆண்டில் இரு போட்டியிலும், 2018ல் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே பெற்றார். அதேபோல கேதர் ஜாதவ் கடந்த ஆண்டு தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவு சாதிக்கவில்லை.

அதேநேரம் உடற்தகுதி விஷயத்திலும் ஜாதவ் சிக்கலில் உள்ளார். ஆனால் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரூ. 7.8 கோடிக்கு வாங்கியது. அதேபோல கடந்த 2018 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கரண் சர்மாவை சென்னை அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியது.

ஆனால் ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் என்ற சுழற்பந்துவீச்சாளர்களின் பட்டாளத்தால் பெரிய அளவில் இவர்கள் வாய்ப்பு பெறவில்லை.

இப்படி கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் இவர்களை ஏலத்துக்கு முன்பான இறுதிபட்டியலில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.