உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்?

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம்.

ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்? Far and Wide எனும் இணையம் அந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் இடங்களில் உள்ள 25 மொழிகளைத் தொகுத்து ஒரு பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த மொழி பேசுவோர் எத்தனை பேர் என்றும் கட்டுரையாளர் Lissa Poirot அந்த பட்டியலில் தந்துள்ளார்.