இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளி! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று உலகை தாக்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் உலகை தாக்கிய சூறாவளியை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்ததாக இந்த சூறாவளி இருக்கும் எனவும் உலகிற்கு இதன் மூலம் பாரிய சேதங்கள் பதிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை அதிகரித்துள்ளமை இவ்வாறான சூறாவளி ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் இந்த சூறாவளி உலகில் எந்த பகுதியை தாக்கும் என இதுவரை விஞ்ஞானிகள் குறிப்பிடவில்லை.

1900 வருடத்தில் இருந்து 2018 வரையான காலப்பகுதியில் உலகை 240 சூறாவளிகள் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினை தொடர்பு கொண்ட போது, வளிமண்டலத்தில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் சக்திவாய்ந்த இடி மின்னல் மற்றும் சூறாவளி ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக அத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த நிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதே சமயம் சில சந்தர்ப்பங்களில் இவ் அனர்த்தம் இலங்கையை தாக்காமல் கடந்து செல்லக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.