பாகிஸ்தான் பிரதமருக்கு அந்நாட்டு இராணுவம் எதிர்ப்பு!... வேகமெடுக்கும் பணிகள்


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய சீக்கியர்கள் குருத்துவாரா சென்று வர விசா இல்லாமல் அனுமதிப்பதற்கு அந்நாட்டு இராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18ஆண்டுகள் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார்.

இதனால், சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அங்கு சென்று வர வேண்டும் என்ற விரும்புகின்றனர்.

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3கிலோ மீற்றர் தொலையில் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.

இந்த குருத்வாரா சென்று இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் வழிபாடு நடத்திவர வழி செய்ய வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில், தற்போது அந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியர்கள் வந்து செல்லலாம், அவர்களிடம் ஒரு அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், பாதுகாப்புதுறை செய்தி தொடர்பாளர் "விசா இல்லாமல் அனுமதிப்பது முறையல்ல என்றும், நாங்கள் பாதுகாப்பு இணைப்பை கொண்டுள்ளோம்.

கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வருவது சட்டபூர்வமாக இருக்க வேண்டும். பாதுகாப்பில் அல்லது இறையாண்மையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.