இலங்கையர்களை ஏமாற்ற அவுஸ்திரேலியா போட்ட திட்டம்! வெளியிடப்பட்டுள்ள ராசிபலன்


இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வித்தியாசமான முறையினை கையாண்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் இலங்கையர்கள் உள்நுழைவதை தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதற்காக அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சு ஜோதிடத்தை பயன்படுத்தி வித்தியாசமான விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையர்களில் பெரும்பான்மையானோர் ராசி பலன்களை நம்புகின்றமையினால் அதனை கொண்டு இந்த சட்டவிரோத நடவடிக்கையினை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் குறித்து buzzfeed.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரங்களில் ஒவ்வொரு ராசிகள் இடம்பெற்றுள்ளன. ராசிக்காரர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய வர முனைந்தால் இது தான் நடக்குமென எதிர்வுகூரும் வாசகங்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜாதகத்தில் தோஷத்துடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்களுக்கு குடும்பப் பிரச்சினை ஏற்படலாம், குற்ற உணர்வு தலைதூக்கலாம், வாழ்க்கை முழுதும் கடன் சுமையால் அவதிப்படலாம் என்றெல்லாம் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.