தமிழ் மொழியில் பச்சை குத்திய ரஷ்ய பெண்: சுவாரஸ்ய பின்னணி!


ரஷ்ய பெண் ஒருவர் உலகின் பழமையான மொழியின் பச்சை குத்த ஆசைப்பட்டு தமிழ் மொழியினை தேர்வு செய்துள்ளார்.

தமிழக இளைஞரை திருமணம் செய்துள்ள அமெரிக்காவை சேர்ந்த சமந்தா என்கிற இளம்பெண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் பேச்சுவழக்கில் உள்ள உலகின் பழமையான மொழியில் பச்சை குத்த ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் கூகுள் தேடலை பயன்படுத்தியபோது, தமிழ் மொழியை காட்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக அந்த பெண், ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்டு, பிரஞ்சு தத்துவஞானியின் "there is nothing called reality there is only perception" என்கிற வார்த்தையினை தமிழ் மொழியில் மாற்றி தருமாறு கூறியுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகள் அதனை தமிழ் தெரிந்த சமந்தாவின் தோழிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் தந்து தோள்பட்டையில், "எதார்த்தம் என்று எதுவும் இல்லை... புலனுணர்வு மட்டுமே உள்ளது" என பச்சை குத்தியுள்ளார்.