அமெரிக்கா அச்சுறுத்தலுக்கு அடிப்பணிய வேண்டிய அவசியம் இல்லை.. இனி தீவிரமாக இருப்போம்: பிரான்ஸ் அதிரடி


பிரான்ஸ் பொருட்கள் மீதான சமீபத்திய அமெரிக்கா அச்சுறுத்தல்கள் குறித்து பிரான்ஸ் ‘தீவிரமாக’ இருக்கும் என்று இளைய பொருளாதார அமைச்சர் ஆக்னஸ் பன்னியர்-ரனச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பிரான்சின் புதிய டிஜிட்டல் சேவை வரி அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறினார்.

இந்நிலையில், டிஜிட்டல் சேவை வரி விவகாரத்தில் பிரான்ஸிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திங்களன்று, அமெரிக்கா அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 2.4 பில்லியன் டொலர், ஆதாவது 100% வரை வரி விதிக்ககூடும் என்று அறிவித்தது. 2020 முதல் இது அமல்படுத்தப்படும் என அமெரிக்கா குறிப்பிட்டது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரான்ஸ் இளைய பொருளாதார அமைச்சர் ஆக்னஸ் பன்னியர்-ரனச்சர், பொருளாதார ரீதியாக பொறுத்தவரை, நாங்கள் டிஜிட்டல் வரியைக் திரும்பப் பெறத் தேவையில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளது.

பிரான்ஸ் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ள விஷயத்தில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும் என்று இளைய பொருளாதார அமைச்சர் ஆக்னஸ் பன்னியர்-ரனச்சர் கூறினார்.