யாழ் ஆயரின் செயலால் அவதியுரும் மாதகல் மக்கள்?


ஞாயிற்று கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்பது) ஞாயிறு திருப்பலி என்பது திருச்சபையின் கட்டளைகளில் ஒன்று அதனை நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் திருச்சபை பல நாள்கள் மாதகல் பங்கில் ஞாயிறு திருப்பலி நடைபெறாமல் யாழ்.ஆயர் தனிப்பட்ட முறையில் தடை செய்திருப்பது திருச்சபைக்கு எந்த விதத்தில் நன்மை பயக்கும் திருப்பலி இல்லாமல் 500ம் மேலான குடும்பத்தினர் உள்ளனர். திருமணச் சடங்கு நிறைவேற்ற முடியாமல் வேறு ஊரில் சென்று நிறைவேற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை யாழ்ப்பாணத்தில் நடை பெற்று வருகிறது.
யாருக்கும் தெரியாமல் மூடிமறைக்கின்றார் யாழ் ஆயர்.
கத்தோலிக்க வரலாற்றில் இதுவரை காலமும் நடைபெறாத பல இக்கட்டான முறைகேடுகளை நிகழ்த்துகிறார் யாழ் ஆயர்........???????????
கத்தோலிக்க மத குருக்களுக்கு சாப்பாடு, தங்குமிடம் , மின்சார கட்டணம் எல்லாவற்றையும் மக்களே தந்து மறைபோதிப்பதற்க்காக வைத்திருந்த குருக்கள் இன்று இறந்த கத்தோலிக்க விசுவாசிக்கு இறுதி திருப்பலி கூட வைக்கவில்லை இதர்க்கு காரணம் யாழ்.ஆயர் ஆம் என்று குருமுதல்வர் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
இப்படி ஒரு கேடு கெட்ட செயலை செய்தவர் ஒரு ஆயரா??? இது நியாயமான செயலா?????
அன்பு, மன்னிப்பு இதுவே இயேசுவின் வழி அவ் வழியில் பயணிக்கும் யாழ் திருச்சபை இவ்வாறு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை யாழ் ஆயர் பங்கு மக்கள் மீது தினிப்பது ஏற்புடையது அல்ல?????

""கடவுளை நம்பு மதங்களை நம்பாதே""