புதிய வியாபாரத்தில் கால்பதித்த ஆசியா பணக்காரர் அம்பானி..! இனி அமேசான்.. பிளிப்கார்ட்க்கு செம அடி தான்


ஆசியா பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் அமேசானுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பல்பொருள் விநியோக சேவையில் இணைய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நிறுவனம் தனது மொபைல் போன் வாடிக்கையாளர் தளத்தை வணிகத்திற்கான ஊக்கமாக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய இ-காமர்ஸ் முயற்சி இந்தியாவின் தற்போதைய ஆன்லைன் சில்லறை நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது.

அம்பானியின் வணிக சாம்ராஜ்யத்தின் இரண்டு துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ‘ஜியோமார்ட்’ எனப்படும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

பல்பொருள் பொருட்களுக்கு ‘இலவச மற்றும் எக்ஸ்பிரஸ் டெலிவரி’ வழங்குவதாக ஜியோமார்ட் கூறுகிறது, தற்போது அது 50,000 பொருட்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் போட்டியாளர்களைப் போல் பொருட்களை தானே வழங்காமல், ஜியோமார்ட் உள்ளுர் கடைகளை வாடிக்கையாளர்களுடன் ‘அப்’ மூலம் இணைக்கும்.

இந்தியாவின் ஆன்லைன் பல்பொருள் சந்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போது ஆண்டுக்கு 870 மில்லியன் டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மக்கள்தொகையில் வெறும் 0.15% பேர் இத்தகைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டளவில் இந்தத் துறை ஆண்டுக்கு 14.5 பில்லியன் டொலர் விற்பனையை காணக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையில் தற்போது வால்மார்ட்டுக்கு சொந்தமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கடந்த ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், தங்கள் சொந்த துணை நிறுவனங்களிலிருந்து பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் புதிய சட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியதை அடுத்து இரு நிறுவனங்களும் பின்னடைவை சந்தித்தன.

இந்த புதிய விதிகளால் பாதிக்கப்படாத இந்திய நிறுவனங்களுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.