மரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் மரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங், சிரியா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தந்தை என அறியப்படுபவரும் தற்போதைய தலைவர் கிம் ஜாங்-ன் தாத்தாவுமான Kim II Sung-ன் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் திகதி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறித்த விழாவில் கலந்து கொள்ளாத அதிகாரிகள், பொதுமக்கள் என எவரும் தேச விரோதிகள் என முத்திரைக்குத்தப்படுவார்கள்.

இந்த விழா தொடர்பில் வாழ்த்து தெரிவித்துள்ள சிரியா அதிபர் அல் ஆசாதுக்கு, தற்போது கிம் ஜாங் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், இரு நாடுகளின் உறவுகள் முந்தைய தலைவர்களின் உண்மையான உன்னத நோக்கத்திற்கும் இரு நாடுகளின் மக்களின் விருப்பத்திற்கும் ஏற்றதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார் கிம் ஜாங்.

இதனிடையே, நாட்டின் முக்கிய விழாவில் முதன் முறையாக கலந்து கொள்ளாமல் தவிர்த்த கிம் ஜாங், ஏப்ரல் 12 ஆம் திகதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அமெரிக்க உளவு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டது.
மட்டுமின்றி, குறித்த சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை மிக மோசமடைந்ததாகவும், அவர் பிழைப்பாரா என்பது சந்தேகமே எனவும் தகவல் பரவியது.
ஆனால் அமெரிக்காவின் அந்த தகவல்களுக்கு சீனாவும், தென் கொரியாவும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்,
தற்போது சிரியா அதிபருக்கு கிம் ஜாங் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.