லடாக் மோதலில் 20 ற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் உயிரிழப்பு - சீனா தரப்பிலும் பெருஞ்சேதம்


லடாக் எல்லையில் சீன இராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில்இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ராணுவ அதிகாரி, 2 வீரர்கள் என 3 பேர் மரணமடைந்ததாக முன்னதாக கூறப்பட்டது. சீனா தரப்பிலும் சிலர் உயிரிழந்திருக்கக்கூடும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகியிருப்பதாவும், எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் சீன தரப்பில்43 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்