டோனி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை... இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசிய இர்பான் பதான்


இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்த இர்பான் பதான், தான் அணியில் இருந்து எப்படி ஓரங்கட்டப்பட்டேன் என்ற தகவலை கூறியுள்ளார்.

கபில்தேவ்விற்கு பிறகு, இந்திய அணியில் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக தெரிந்தவர் இர்பான் பதான். கடந்த 2003-ஆம் ஆண்டு அறிமுகமான இவர், கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்தார்.

கங்குலியின் காலகட்டத்தில் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டது ஆனால் அதன் பின்னர் வந்த கேப்டன்கள் இவருக்கு பெரிதான வாய்ப்புகளை கொடுக்கவில்லை. அதன் பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இது குறித்து இர்பான் பதான் இப்போது கூறுகையில், நான் கடைசியாக ஆடிய டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான்தான் ஆட்டநாயகன் விருது பெற்றேன்.

உதாரணமாக விருத்திமான் சகா காயம் காரணமாக ஒரு சில ஆண்டுகள் ஆடவில்லை. அந்த காலகட்டத்தில் ரிசப் பண்ட் பிடித்து இரண்டு சதங்களை அடித்தார்.

பின்னர் விருத்திமான் சகா காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் உடனடியாக அவருக்கு அணயில் இடம் கிடைத்தது. அணி நிர்வாகமும் அவருக்கு முழு ஆதரவையும் அளித்தது.

அதுபோன்ற ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை. இர்பான் பதான் பந்துவீச முடியாது. என்றெல்லாம் பேசினார்கள். இவ்வாறெல்லாம் பேசி மீண்டும் மீண்டும் என்னை அழுத்தத்தில் தள்ளினார்கள்.

அவர்கள் சொல்வதையெல்லாம் செய்தேன். ஆனால் எனது ரோலை தொடர்ச்சியாக மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் சாத்தியமே இல்லாத சூழ்நிலையில் நானும் எனது அண்ணனும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தோம்.

அந்த நேரத்தில் சனத் ஜெயசூர்யா போன்றோரது விக்கெட்டை நான் வீழ்த்தினேன் அதன்பின்னர் எனக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

அதற்கு அடுத்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்திய அணி அந்த தொடரை முதல் மூன்று போட்டிகளில் வென்று விட்டது. ஆனாலும் என்னை கண்டுகொள்ளவில்லை. அப்போது இருந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் எதுவுமே என் கையில் இல்லை என்று சொல்லி கைவிரித்து விட்டார்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய தொடரில் நான் சரியாக பந்து வீசவில்லை என்று டோனி கூறியதாக ஊடகங்கள் பேசியது.

ஏன் இப்படி கூறினீர்கள் என்று டோனியிடமே கேட்டேன், அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை எல்லாம் இர்பான் திட்டப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மீண்டும் எனக்கு டோனி அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை இப்படித்தான் நான் அணியில் இருந்து ஓரங்கட்ட பட்டேன் என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்