பிரித்தானியாவில் ஆரம்ப பள்ளி குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதுபிரித்தானியாவில் அனைத்து ஆரம்ப பள்ளி மாணவர்களும் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு முன் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப மாணவர்களும் கோடை விடுமுறைக்கு முன்னர் பள்ளியில் நான்கு வாரங்கள் செலவழிக்க வேண்டும் என்ற அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் இது இனி சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அதிக மாணவர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர்களின் தலைவர்கள் இது ஒருபோதும் நடைமுறை சாத்தியமாக இருந்ததில்லை என்றார்.

பிரித்தானியாவில் மேல்நிலைப் பள்ளிகள் செப்டம்பர் வரை மீண்டும் முழுமையாக திறக்கப்படாது என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ஒப்புக்கொண்டதை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நிர்வகிக்க தனி விதிகள் உள்ளன.

பிரித்தானியாவில் குழந்தைகள் கடந்த வாரம் ஒரு கட்டமாக ஆரம்ப பள்ளிகளுக்குத் திரும்பத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்