தேங்காய் பாலை குடிப்பதால் எவ்வளவு நன்மை உள்ளதுன்னு தெரியுமா?



பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது லைட்டாகதான் இருக்கும். தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.

தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் இருக்கிறது. இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. குழந்தை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் ஸ்மூத்தி செய்யும் போது பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியுடன் சியா விதைகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். உடல் எடை குறைப்புக்கான சரியான பானமாக இது இருக்கும்.

விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

தேங்காய்பாலின் நன்மைகளை பற்றி பார்ப்போம்

வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகளை தேங்காய்பால் குணப்படுத்தும்.
உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க பயன்படுகிறது, தேங்காய்பால் எளிதில் செரிக்கக் கூடியது.
தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது, இதில் பொட்டாசியம் மிகவும் அதிகம்.
தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவி செய்யும்.
தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்குமாம்.
தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கும்.
இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கும்.
<ஷசெலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாக்கும்.
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்