மீண்டும் அச்சுறுத்தும் கொரொனா ! சீனாவில் சுமார் 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்


சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் Xinjiang மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சீனாவின் உரும்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்