நீண்ட நாள் சளி, காய்ச்சலையும் உடனே விரட்டியடிக்கும் அற்புத பானம்! தினமும் மூன்று வேளை குடித்தாலே போதும்


இன்று பலரும் காலநிலை மாற்றத்தால் பெரும் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

சளிக்காய்ச்சல் என்பது பொதுவான ஒன்றாக இருந்த போதிலும் அது நோய்த்தடுப்பாற்றல் குறைவாக உள்ள மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாகலாம்.

சளிக்காய்ச்சல் பெரும்பாலானவர்களுக்குக் கடுமையானதாக இருப்பதில்லை. ஆனாலும் சிலருக்கு அது மிகவும் கடுமையானதாக இருக்கும்.

இதனை தடுக்க பலர் மருந்துக்கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி பயன்படுத்துண்டு. இது சில சமயங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் பக்கவிளைவுகள் எதுவுமின்றி சளி, காய்ச்சலையும் உடனே விரட்டி அடிக்கும் ஓர் இயற்கை அற்புத பானம் ஒன்றினை பார்ப்போம்.

தேவையானவை
இஞ்சி
இலவங்கப்பட்டை
நட்சத்திர சோம்பு
தேன்
ஆப்பிள் சீடர் வினிகர்
எலுமிச்சை பழம்
தண்ணீர்

செய்முறை

ஒரு நான்கு அங்குலம் அளவுள்ள இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாகக் கழுவவேண்டும்.

பின்பு தோலுரித்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அதில் எடுத்து வைத்திருந்த இஞ்சி துண்டு.

இரண்டு இலவங்கப்பட்டை, மற்றும் இரண்டு நட்சத்திர சோம்பு இவை மூன்றையும் போட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்கும் வரை சூடு செய்ய வேண்டும்.

பின்பு அதை இறக்கி ஒரு கப்பில் தேவையான அளவு ஊற்றி நன்றாகக் கலக்கி விட வேண்டும். பின்பு 2 ஸ்பூன் தேன் எடுத்து அதில் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதில் ஒரு பாதி நறுக்கிய எலுமிச்சம்பழத்தை பிழிய வேண்டும். அவ்வளவு தான். ஜலதோஷத்தைப் போக்கக் கூடிய அற்புதமான நிவாரணி பத்து நிமிடத்தில் தயார் ஆகிவிட்டது.

இந்த நிவாரணியைச் சூடாகவும் அருந்தலாம் அல்லது சற்று ஆறிய பிறகு அருந்தலாம் ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்துவதைத் தவிர்க்கவும்.

மிதமான சூட்டில் அருந்தினால் மிகவும் நல்லது. தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அருந்தி வந்தால்,பொதுவாக ஏழு நாட்கள் வரை இருக்கும் ஜலதோஷம் ஓரிரு நாட்களில் முற்றிலும் குணமடைந்து விடும்.

இந்த அற்புத நிவாரணி இரண்டு நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்